IPL 2018:எப்பவுமே ஏ.பி.டிவில்லியர்ஷை நம்பி இருக்கக் கூடாது!அவர நம்புனா இப்டிதான் இருக்கும்!விராட் கோலி தோல்வியால் புலம்பல்!

Default Image

நேற்று நடந்த  ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப்போட்டியின் முடிவை அடுத்து, பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரஹானே 33 ரன்களும் கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 53 ரன்கள் எடுத்தார். பார்த்திவ் பட்டேல் 33 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Image result for ipl 2018 ab de

இந்த தோல்விக்கு பின்பேசிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ”இது விசித்திரமான போட்டியாக இருந்தது. ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆனால் அடுத்தடுத்து எங்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போய்விட்டது. இது நிச்சயம் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று தான். ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. ஏ.பி.டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க விலலை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலாக செயல்பட்டனர்.

Image result for ipl 2018 virat kohli press

ஆனால் சில அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போதும் டிவில்லியர்சே கைகொடுப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும். அவர் முடிந்த அளவு ரன்கள் சேர்த்தார். இந்த தொடரில் சில புதிய வீரர்கள் நன்றாக செயல்பட்டார்கள். புதிய பந்தில் உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினார். சாஹல், சிராஜ், மொயின் அலி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. அடுத்த தொடரில் வலுவாக திரும்பி வருவோம். பிளே ஆப் சென்ற மற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள். என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்