வெறும் கூட்டம் மட்டும் கூடுனா போதுமா ரஜினி ,கமல்!உங்க இருவர் கணக்கே சரியில்லை!திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,கூட்டம் கூடுவதை பார்த்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்புக் கணக்கு போடக் கூடாது என கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பேசிய திருநாவுக்கரசர், 3வது அணி அமைத்தால் அது மக்களிடையே எடுபடாது எனக் கூறினார். பாஜகவை ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியால்தான் வீழ்த்த
முடியும் என்றார்.
ரஜினிக்கும், கமலுக்கும் அரசியலில் மக்களிடையே எவ்வாறு வரவேற்பு இருக்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறிய திருநாவுக்கரசர், கூட்டம் கூடுவதை மட்டுமே வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என நடிகர்கள் தப்புக் கணக்கு போடக் கூடாது என்றார்.
இதற்கிடையே கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரசின் தற்போதைய தலைவர் தெய்வேந்திரன் முன்னாள் தலைவர் குட்லக் ராஜேந்திரன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது திருநாவுக்கரசர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.