நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது; தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார்.

நீட் வேண்டாம் என திமுக சொன்னாலும்,தேர்வு இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்; டீ மாஸ்டரின் மகள் கூட தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆரம்ப காலத்தில் நீட் தேர்வில் பிரச்னை இருந்தது உண்மைதான்; ஆனால் தற்போது பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் மாணவ,மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்