#BREAKING: நாளை “மகாகவி நாள்” கடைப்பிடிக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Default Image

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளை “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு.

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளை செப்டம்பர் 11ம் தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று. தெய்வப்பற்று. தேசப்பற்று. மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்.

இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல், சமூக. பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணா அவர்களளால், “மக்கள் கவி” என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி, நினைவில்லமாக மாற்றினார். 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும். எனவே, நாளை “மகாகவி நாள்” கடைப்பிடிக்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்