தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை!

Default Image

பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுக்கும் வேளையில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கரட்டடிபாளையம் கொளப்பளுர், நல்லகவுண்டன்பாளையம், டி.என் பாளையம் உள்ளிட்ட பகுதியில் சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகத்தில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

 

சத்தியமங்கலத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியபடி பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையில் பவானிசாகர் அருகே எரங்காட்டூர் கிராமத்தில் உள்ள 100 வருட பழமை வாய்ந்த ஆலமரம் காற்றின் வேகத்தில் வேருடன் சாய்ந்து விழுந்தது.

வேலூர் மாவட்டம், கழிஞ்சூர், லத்தேரி, செங்குட்டை, கல்புதூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

சேலம் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வாய்க்கால் பட்டறை மற்றும் அம்மாபேட்டை, வீராணம், வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்