இவர்கள் ஒன்றிணைந்தால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம்.! மம்தா பானர்ஜியின் ராஜ தந்திரம்.!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம்.
மேற்கு வங்கத்தில் விரைவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தற்போது ஆரம்பித்துள்ளார் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார்.
அப்போது, ‘மேற்கு வங்க மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை பெருகுவதிலேயே தமது அரசின் முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை பிடித்ததாக பாஜக பெருமையோடு கூறி வருகிறது. கடந்த 1989ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைவதற்கு முன்பு வரை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியானது 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
வருகின்ற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் அது மாபெரும் சக்தியாக மாறும். அதன்மூலம் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிட முடியும்.’ என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தா கூட்டத்தில் தெரிவித்தார்.