உலகத்துக்கே வழிகாட்டியாக மாறி வரும் இந்தியா.! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்.!

Default Image

மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இது போன்று நம் பிரதமரின் செயல்பாடு உலகத்திற்கே வழிகாட்டும் நாடாக இந்திய நாடு உயர்ந்து வருகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.பெருமிதமாக குறிப்பிட்டார்.

நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பாக 75வது இந்திய சுதந்திர தின விழாவை ஒட்டி, வெளியில் அதிகமாக மக்கள் மத்தியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட தொகுப்பு கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார்.

அந்த விழாவில் பேசிய எல்.முருகன், ‘ கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நம் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலைப்போக்குவரத்து , ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு உள்ளது. எந்த நாட்டையும் சார்ந்திருக்காமல் சுயசார்பு பாரதம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கு முன்பாகவே கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சொந்தமாக வெள்ளைகாரர்களை எதிர்த்து கப்பலோட்டினார்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்குவித்து வருகிறார். மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இது போன்று நம் பிரதமரின் செயல்பாடு உலகத்திற்கே வழிகாட்டும் நாடாக இந்திய நாடு உயர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.

நம்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில்கள் மூலம் நமது ரயில் பயணங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிய கோர்க்கப்பலை பாரத பிரதமர் நாட்டிற்காக அர்ப்பணித்தார். இதற்கு முன்பு வெளிநாடுகளை எதிர்பார்த்து இருந்த நேரத்தில், நம் நாட்டிலேயே இது போன்ற சக்தி வாய்ந்த கப்பலை தயாரித்து உள்ளோம்.’ என்று பெருமையாக தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்