விஜய் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் முக்கிய காமெடி பிரபலம்.! தளபதி 67இலும் இவர் இருக்கிறாராம்…

Default Image

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை தான் என கூறுகிறார்கள்.

thalapathy 67

எப்போது தான் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்க என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

இதையும் படியுங்களேன்- ஹீரோயின்கள் பற்றிய அந்த கேள்வி… ஷாக்கான ஜெயம் ரவி.! வச்சி செய்த சிம்பு.! வைரலான அந்த வீடியோ.!

thalapathy vijay

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தளபதி 67 படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சமீபத்திய ஒரு பேட்டியில் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

yogi babu

சமீபத்தில் அவரிடம் நீங்கள் தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்க்கு பதில் அளித்த அவர் லோகேஷ் சொன்னாரு..கண்டிப்பாக பண்ணுவோம்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது  உறுதியாகிவிட்டது. மேலும் யோகி பாபு  விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் மற்றும் தற்போது உருவாகி வரும்  வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்