குஜராத்தில் நாளை பந்த் அழைப்பு-காங்கிரஸ்
வேலை வாய்ப்புகள், பணவீக்கம் ஆகியவற்றுக்காக குஜராத் காங்கிரஸ் நாளை பந்த் அறிவித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை(செப் 10) பந்த் நடத்த காங்கிரஸ் அழைத்துள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகளை மூடி வைக்குமாறு வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழக்கமான வேலை கிடைக்கக் கோரி மக்கள் பந்த் அழைப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் 4.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்கள் இருப்பதாகவும், அதே நேரத்தில் லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.