#BREAKING: எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு அமர்வு விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.