#BREAKING: அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்!
அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை தரப்பில் தகவல்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சுமார் 72 நாட்களுக்கு பிறகு, அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். எடப்பாடி பழனிசாமியுடன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் சென்றிருந்தனர். அப்போது, செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஈபிஎஸ், ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்தார். ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள், அவர் பச்சோந்தியை விட அதிகம் கலர் மாறுபவர் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓ.பன்னீர் செல்வம் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் பாதுகாப்புக் கோரி மனு அளித்திருந்தார். அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும்போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இடையுறு இல்லாத வகையில் பாதுகாப்பு தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றம் அனுமதி அளித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. அதிமுக அலுவலகம் செல்ல பாதுகாப்பு கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில், காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.