இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு உடல்நலக்குறைவு
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலக்குறைவு காரணமாக நடக்கவும், நிற்கவும் சிரமப்பட்டார்.அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டப்பின் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.அதன் பின்னர் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக அறிவித்தார் இரண்டாம் எலிசபெத்.
96 வயதான இரண்டாம் எலிசபெத் தனது பிரைவி கவுன்சிலின் கூட்டத்தை ரத்து செய்த ஒரு நாள் கழித்து அவருக்கு உடல்நலக்குறைவு என்ற அறிவிப்பு வந்துள்ளது.