லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு வருது ஆப்பு… அரசு எச்சரிக்கை..!
அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
கோழிக்கோடு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அரசு அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதைப்போன்ற சில அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரத்துக்கே அவப்பெயரை எற்படுத்தி விடுகிறது.
அவர்களின் தேவைக்கேற்ப, நியாயமான, கைநிறைய சம்பளம் தரப்படுகிறது, எனவே, அதற்கேற்ப கண்ணியமாக வாழ அவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்