எனக்கு அந்த மாதிரி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க…கெஞ்சும் வரலட்சுமி சரத்குமார்.!
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு பெண்ணாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை எளிதில் நடித்து முடிக்க கூடியவர் வரலட்சுமி சரத்குமார். சண்டைக்கோழி, மாரி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார்.
இதையும் படியுங்களேன்- திருச்சிற்றம்பலத்தை அடுத்து தனுஷுக்கு கிடைத்த பெரிய சர்ப்ரைஸ்… இந்த சம்பவம் வேற லெவல்.!
தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் வரலட்சுமிக்கு காமெடி கதாபத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவே இல்லையாம் இதனால் அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாகவும் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனக்கு யாராவது ஒன்னு தெரியாத பெண்…அல்லது காமெடியான ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க கொடுங்க என்று தான் கத்திட்டு இருக்கேன்..ஆனால் யாருமே கொடுக்கமாட்டிகாங்க..பல படங்களில் வில்லியாக நடிப்பதற்கு தான் வாய்ப்புகள் வருகிறது. யாராச்சும் காமெடி படம் இருந்தால் சொல்லுங்க..” என தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.