‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? – டிஆர்பி ராஜா
‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? என டி.ஆர்.பி.ராஜா ட்வீட்.
‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி- விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் விலை ரூ.17,800 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் மாநில அரசை ஏன் விமான சேவையை வழங்கக்கூடாது.
‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகு கொடுத்தது பெரியார்.’ என பதிவிட்டுள்ளார்.