5 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைமில் புகார்!!
பெண்களை மனரீதியாக பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோ செய்யும் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைமில் புகார்.
பொதுவாக யூடியூப் சேனல்கள் தங்களது சேனல் வைரலாக வேண்டும் என்பதற்க்காக கேமராவை மறைத்து வைத்து பிறரிடம் பேச்சுக் கொடுப்பதை ரேகார்ட செய்து யூடியூப்-ல் பிராங்க் வீடியோவாக வெளியிடுகின்றனர்.
அந்தவகையில் சில யூடியூப் சேனல்கள் பெண்களிடம் தகாத முறையில் கேள்விகளை எழுப்பி அவர்கள் கூறும் பதில்களை பதிவிட்டு வருகின்றன. அதனால் பெண்கள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னையில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பெயரில் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்ச் மிட்டாய், ஜெய்மணிவேல் , நாகை 360 போன்ற யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.