அதிர வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ! ஓப்பனிங் அமர்க்களம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் போட்டிகள் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் நடிகர் நானி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. அண்மையில் தமிழில் கமல்ஹாசன் அடுத்த சீசனை தொகுத்து வழங்கும் டீசரை வெளியிட்டார்கள்.
ஆனால் தெலுங்கு பிக்பாஸ் 2 அதைவிட சிறப்பாக வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இணையதளத்தில் இந்த வீடியோவை 6 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம். சீசன் 2 ஜூன் 2 ம் வாரத்தின் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.