இதுதான் பிரமாண்டம்.. ரசிகர்களை பிரமிக்க வைக்க வருகிறான் சோழன்.! மிரட்டலான பொன்னியின் செல்வன் டிரைலர் இதோ…

Default Image

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார்.

ponniyin selvan

இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

ponniyin selvan

இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது படத்திற்கான ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- ராமராஜனை பார்த்து பயந்தார்களா ரஜினி – விஜயகாந்த்.? திரைமறைவு சீக்ரெட்ஸ் இதோ…

ponniyin selvan part 1

டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. அதைப்போல ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது என்றே கூறலாம். எனவே படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

ponniyin selvan trailer

படத்தின் ட்ரைலர் & இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரஜினி,கமல், மிஷ்கின் என பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai