BREAKING NEWS:கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு!பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம்!குமாரசாமி
கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார் என்று குமாரசாமி தெரிவத்துள்ளார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் என்று குமாரசாமி தெரிவத்துள்ளார்.
கர்நாடக மாநில முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி மே 21ஆம் தேதி பதவியேற்கிறார். .இதாபோல் மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.