சைரஸ் மிஸ்ட்ரி மரணம் – 9 நிமிடத்தில் 20கிமீ வெளியான திடுக்கிடும் தகவல்!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி ஞாயிற்று கிழமை(செப் 4) அன்று கார் விபத்தில் உரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சைரஸ் மிஸ்ட்ரி சென்ற காரில், சைரஸ் மிஸ்ட்ரி உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அதில் மிஸ்ட்ரி மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கிர் பண்டோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனிருந்த பெண் மருத்துவர் அனயாதா பண்டோல் மற்றும் அவரது கணவர் டேரியஸ் பண்டோல் பலத்த காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மிஸ்ட்ரி மற்றும் அவரது நண்பர் இருவரும் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததால் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூர்யா ஆற்றுப் பாலம் அருகே நடந்துள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து அருகிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சைரஸ் மிஸ்திரி சென்ற கார் 20 கிமீ தூரத்தை வெறும் 9 நிமிடங்களில் கடந்தது தெரிய வந்துள்ளது. மணிக்கு 134 கிமீ வேகத்தில் சென்றதால் கார் டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.