இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்கள் விடுதலை…!
இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் பத்து பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.