BREAKING NEWS:கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து!

Default Image

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல்  குமாரசாமி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்