#BREAKING: உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்பி ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பாத், திரிவேதி, பார்டிவாலா ஆகியோரை கொண்ட அமர்வு இன்று வழக்கை விசாரிக்கிறது. உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கூறி ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டுள்ளது.