அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை.!எழுத்துபூர்வமாக பதிவிட்ட டெல்லி முதல்வர்.!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,சென்னை அண்ணா நூலகத்தை நூலகத்தை சுற்றிபார்த்துவிட்டு, அதனை பற்றி பாராட்டி நூலக பதிவேட்டில் எழுதிவிட்டு சென்றுள்ளார்.
சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று தமிழக அரசின் ‘புதுமை பெண்கள்’ திட்டம் தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் பங்கேற்றவுடன் அரவிந்த் கெஜ்ரிவால், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றார். அங்கு பார்த்துவிட்டு, நூலக பதிவேட்டில், ‘ இதுவரை நான் பார்த்ததில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் இருக்கும் நூலகம். அதனை சரியாக முறைப்படுத்தி வைத்துள்ளனர்.
இதையும் படியுங்களேன் – சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – டெல்லி முதல்வர்
அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ்நாட்டுக்கு மட்டும் பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. இந்த பெருமையை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என பொருள்படும் படி ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.