18வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெட் பாத் & பியோன்டின் தலைமை நிதி அதிகாரி!!

Default Image

பெட் பாத் & பியோண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி குஸ்டாவோ அர்னால், நியூயார்க்கின் புகழ்பெற்ற ஜெங்கா கோபுரத்தின் 18வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.

கடந்த புதன்கிழமை பெட் பாத் & பியோண்ட், அதன் பங்குகளில் கிட்டத்தட்ட கால் பகுதியை இழந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் நிறுவனத்தில் 42,000 பங்குகளை $1 மில்லியனுக்கு விற்றதாக கூறப்படுகிறது. பின் அந்நிறுவனம் தோராயமாக 900 கடைகளில் 150 கடைகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. அர்னால் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதன் ஊழியர்களில் 20 சதவீதத்தை பணிநீக்கம் செய்தது.

அர்னால் நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் மட்டுமே இருந்தார், இதற்கு முன்பு பிரிட்டிஷ் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனமான Avon இல் அதே பாத்திரத்தை வகித்தார் மற்றும் முன்னணி Procter & Gamble இல் வெளிநாட்டில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார்.  அவர் இறக்கும் போது, ​​அவரிடம் $6.5 மில்லியன் பெட் பாத் & பியோண்ட் பங்குகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்