BREAKING NEWS:பாஜகவிடம் இருந்து மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மீட்பு! பேரவையில் மிகச் சிறப்பான விருந்து!

Default Image

காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக பேரவைக்கு அழைத்து வரப்பட்டார்.

தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது:

 

காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை கர்நாடக சட்டப்பேரவைக்கு வரவில்லை. எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் இதுவரை அவைக்கு வரவில்லை.

மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட்:

இந்நிலையில்  மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட் பின்ச் ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல்துறை ஓட்டலுக்கு விரைந்தனர் .

பெங்களூரு ஹோட்டலில்  காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்:

பெங்களூரு ஹோட்டலில்  காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர். அவரை பாஜகவினர் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த ஹோட்டலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு எம்எல்ஏ இருக்கிறாரா? என காவல்துறை டிஜிபி சோதனை நடத்தினார். இந்த பரபரப்புக்கு இடையே எம்எல்ஏ ஆனந்த் சிங் அந்த ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா கர்நாடக பேரவைக்கு அழைத்து வரப்பட்டார்:

காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக பேரவைக்கு அழைத்து வரப்பட்டார்.பின்னர் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்