அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்த கோரிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இக்கூட்டம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை நடத்திய கேரள அரசுக்கு நன்றி. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன; அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.
Attended the 30th Southern Zonal Council Meeting chaired by Hon’ble Union Home Minister @AmitShah and placed the key demands of Tamil Nadu.
It was also a great opportunity to share my thoughts with my counterparts in southern states and strengthen our relations. (1/2) pic.twitter.com/MxML67hqXb
— M.K.Stalin (@mkstalin) September 3, 2022