முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது – அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image

தமிழக காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி. 

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது; அன்றே புகார் அளித்த நிலையில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது; ஜெயலலிதா இருந்த அறை முழுவதுமாக சூறையாடப்பட்டது.திமுக தான் நடந்த சம்பவத்திற்கு முழு காரணம். அதற்கு துணையாக இருந்தது காவல்துறை.

சிபிசிஐடி போலீசார் இன்னும் ஏன் அதிமுக அலுவலகம் சென்று விசாரணை நடத்தவில்லை?; 2 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். விசாரணை நடைபெறவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். 15 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது; தமிழக காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்