டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பிடிக்காத ஆளே இருக்கமுடியாது அந்த அளவிற்கு மனதிற்கு உருக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சினிமா துறையில் 25 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நல்ல பாடல்களை கொடுத்து பயணித்து வருகிறார். இவர் கடந்த 31-ஆம் தேதி தான் தன்னுடைய 43-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையும் படியுங்களேன்- நைட்டு தான்…அத பண்ண புடிக்கும்.! அதுவும் என்னோட நன்பர்களுடன்… மனம் திறந்த பேசிய ராசி கன்னா.!
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா (03.09.2022) இன்று நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரபல விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுரு ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.