திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ தங்கம் பறிமுதல் – 55 பேரிடம் விசாரணை…!
திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.
திருச்சி விமான நிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சிக்கு வந்த விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை மேற்கொண்டது.
இதில், 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.