இந்தியாவில் ஜூலை மாதம் 45,000 கணக்குகளை முடக்கிய ட்விட்டர்

Default Image

வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் ஜூலை மாதம் 45,000 கணக்குகளை ட்விட்டர் முடக்கியது.

ட்விட்டர் இன்று(செப் 2) வெளியிடப்பட்ட அதன் மாதாந்திர இணக்க அறிக்கையில், அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜூலை மாதத்தில் 45,191 இந்திய பயனர்களின் கணக்குகளை ட்விட்டர் தடை செய்ததாகக் கூறியது.

இதில் 42,825 கணக்குகள் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருமித்த நிர்வாணத்தை ஊக்குவித்ததற்காகவும், மேலும் 2,366 கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காகவும் முடக்கப்பட்டுள்ளன.

இதே போல் ஜூன் மாதத்தில், ட்விட்டர் 43,000 இந்திய கணக்குகளை தடை செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்