#BREAKING: டிஎன்பிஎஸ்சி மூலம் அலுவலர் நியமன உத்தரவுக்கு தடை! – உயர் நீதிமன்றம்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு.
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறையை சேர்ந்த ஸ்ரீநிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தற்காலிக அடிப்படையிலான உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி, மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக ஆக.1-ஆம் தேதி அரசாணை வெளியானது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.