செப்-4ம் தேதி திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள்… தமிழக அரசு அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008, 2009 ஆம் கல்வியாண்டு முதல் 2014 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 1,50,000/- காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 இலட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படம் சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் எ 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ. 26,25,000/ (இருபத்தாறு இலட்சத்து இருபதைந்தாயிரம் மட்டும்) காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 இலட்சம் என 20 பேருக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் திருக்கரங்களால் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 314 பேருக்கு ரூ.52 இலட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையும் விருதாளர்களின் பெயர் பொறித்தத் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.
“தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா” #CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/cm3VbKDFsT
— TN DIPR (@TNDIPRNEWS) September 2, 2022
தமிழ்நாடு அரசின் விருதுகள் – சிறந்த இயக்குநர்கள்
2009 – வசந்தபாலன் (அங்காடித் தெரு)
2010- பிரபு சாலமன் (மைனா)
2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013- ராம் (தங்கமீன்கள்)
2014- ராகவன் (மஞ்சப்பை)
தமிழ்நாடு அரசு விருதுகள்
சிறந்த நடிகர்:
2009 – கரண் (மலையன்)
2010 – விக்ரம் (ராவணன்)
2011 – விமல் (வாகை சூடவா)
2012 – ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்)
2013 -ஆர்யா (ராஜா ராணி)
2014 – சித்தார்த் (காவியத் தலைவன்)
தமிழ்நாடு அரசு விருதுகள் – 2009
சிறந்த படங்கள்:
1.பசங்க
2.மாயாண்டி குடும்பத்தார்கள்
3.அச்சமுண்டு அச்சமுண்டு
தமிழ்நாடு அரசு விருதுகள் – சிறந்த இசையமைப்பாளர்
2009-சுந்தர் சி.பாபு(நாடோடிகள்)
2010-யுவன்சங்கர் ராஜா(பையா)
2011-ஹாரிஸ் ஜெயராஜ்(கோ)
2012-இமான்(கும்கி)
2013-ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்)
2014- ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்)