BREAKING NEWS:நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா? உச்சநீதிமன்றம் காங்கிரஸ்க்கு கேள்வி ?
போபையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.
போபையா எதிரான மனு விசாரணை:
பின்னர் வாதத்தை தொடங்கிய கபில் சிபில் , கர்நாடக தற்காலிக சபாநாயகர் போதிய அனுபவம் இல்லாதவர்என்றும் போபையாவுக்கு எதிராக உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.மேலும் போபையா தற்காலிக சபநாயகராக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்காது என்று காங்கிரஸ் வாதிட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் கர்நாடக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா? என்ற உச்சநீதிமன்ற கேள்விக்கு காங்கிரஸ் பதில் கூறியது..இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது .
கே.ஜி.போபையாவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்வதாக கபில் சிபல் வாதிட்டார்.
சட்டமன்ற நிகழ்வுகளை 11 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.
அனைத்து ஊடகங்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்து கொள்ளலாம் வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் சட்டப்பேரவையில் நடக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுரை.
மூத்த எம்.எல்.ஏக்கள் நிறையபேர் இருக்கும்போது ஆளுநர் ஏன் போபையாவை நியமித்தார்?என்று நீதிபதி பாப்டே கேள்வி எழுபினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் என்றும் கர்நாடக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.