தங்கம் விலை சரிந்தது….சவரனுக்கு ரூ.352 குறைந்து..!
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.37,680-க்கு விற்பனை. ஒரு கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.