நான் அடிச்சு சொல்றேன் விக்கெட் கீப்பர்கள் நல்ல கேப்டன் இல்ல!அவங்க வேலை இது மட்டும் தான்!வார்னே அதிரடி கருத்து

Default Image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் ஷேன் வார்ன்,கிரிக்கெட் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர்தான் பந்து வீச்சு, பேட்ஸ்மென் உத்தி ஆகியவற்றை அருகில் இருந்து பார்ப்பவர்கள், அதனால் அவர்களைக் கேப்டனாக்குவது சிறந்தது என்ற கருத்து ஊன்றியுள்ள நிலையில் விக்கெட் கீப்பர்கள் நல்ல கேப்டன்களாக முடியாது என்று  கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிலேயே கூட ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாகியுள்ளார், ஆனால் கில்கிறிஸ்டை விட பன்மடங்கு கிரிக்கெட் கூடுதலாகத் தெரிந்த ராட்னி மார்ஷ் கேப்டனாக இருந்ததில்லை. பாகிஸ்தானில் மொயின் கான், இந்தியாவில் தோனி, ஆஸ்திரேலியாவில் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையில் சங்கக்காரா, ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர், இங்கிலாந்தில் அலெக்ஸ் ஸ்டூவர்ட் போன்றவர்கள் விக்கெட் கீப்பர்/கேப்டனாக இருந்தவர்கள்தான் ஆயினும் தோனி அளவுக்கு நீண்ட காலம் கேப்டனாக அவர்கள் இருந்ததில்லை.

தற்போது பால் டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு ஆஸி. கேப்டனாக டிம் பெய்ன் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஷேன் வார்ன் கூறும்போது “விக்கெட் கீப்பர்கள் நல்ல கேப்டன்களாவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் சிறந்த உதவி கேப்டன்களாக இருக்க முடியும், களவியூகத்தை அமைக்க, பீல்டிங் தரத்தை நிர்ணயிக்க விக்கெட் கீப்பர்கள் துணை கேப்டன்களாக உதவ முடியும்.

டிம் பெய்ன் நீண்டகாலத் தெரிவாக இருக்க முடியாது, ஆனாலும் அவர் குறுகிய காலத்தில் நன்றாகவே தன்னை நிரூபித்துள்ளார். ஜஸ்டின் லாங்கர் தற்போது வந்திருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரிய நல்ல அறிகுறி” என்றார் வார்ன்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்