திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு!
ஐம்பொன் சிலைகள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்ததும், கோயில் நடையை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றுள்ளார். இன்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது 2 அடி உயரமுள்ள சிவன் சிலை மற்றும ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள பார்வதி சிலைகள் திருட்டு போனது தெரியவந்தது. கோயிலில் உள்ள உற்சவர் சிலை, நடராஜர் சிலை மற்றும் சிவகாமி சிலை ஆகியவை வேறு அறையில் இருந்ததால் அவை தப்பின.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.