BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணிக்கு கூட்ட ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு!
கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணிக்கு கூட்ட ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது.
இதற்கு முன் கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ கே.ஜி.போபையாவை நியமித்தார் ஆளுநர்.
சற்று முன்:
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவின் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடக எம்எல்ஏக்களில் மூத்த உறுப்பினராக எங்கள் கட்சியை சேர்தவர் இருக்கும் போது கே.ஜி.போபையாவை நியமனம் செய்தது தவறு என்று காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.