ஜூலை 20ஆம் தேதி டீசல் விலை உயர்வை கண்டித்து முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூலை 20 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திலுள்ள நான்கரை லட்சம் லாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 45 லட்சம் லாரிகள் ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு முதல் இயங்காது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.