BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ கே.ஜி.போபையாவை நியமித்தார் ஆளுநர்!
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ கே.ஜி.போபையாவை நியமித்தார் ஆளுநர்.
கர்நாடக மாநிலத்தின் 23ஆவது முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா:
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தின் 23ஆவது முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா.அதன் பின் விவசாயிகளின் 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுள்ள வங்கிகடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம்:
நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன்? காங்கிரஸ்- மஜத தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி பாஜக தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆளுநரை கேள்வி கேட்பதை விட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தான் சரியாக இருக்கும் என்றும் “104 இடங்கள் மட்டுமே வென்ற பாஜகவை எதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்?”என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாளை கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நல்லது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா?மேலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போதைய சூழலில் கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருத்து.
நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை நாளையே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் கருத்து தெரிவித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக டி.ஜி.பி மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் முன் காலம் சென்று விடும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.
இதேபோல் பெரும்பான்மையை நிரூபிக்க திங்கள் வரை அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பு கோரிக்கை நிராகரிபக்கபட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் தந்த நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இதில் வாக்கெடுப்பு நடைபெறும் வரை முக்கிய கொள்கை முடிவுகளை எடியூரப்பா எடுக்கக்கூடாது என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.