கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும்,நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும்!தமிழிசை சவுந்தரராஜன்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தை கிடப்பில் போரட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள் கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும்,நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உறுதி செய்தது, உச்ச நீதிமன்றம். கர்நாடகம், மற்றும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.