ரூ.3399 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன்கள் வழங்குகிறது இந்த இரு நிறுவனங்கள்..!

Default Image
பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இந்தியா இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க இருக்கின்றன. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2600 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சுமார் 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இருநிறுவனங்களும் நாடு முழுக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய இந்த தி்ட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்யும் போது ஸ்மார்ட்போனுக்கு ரூ.3399 விலையில் வாங்க முடியும். ஏர்டெல் இந்தியா சார்பில் 35 மாதங்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. Image result for பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இந்தியா
ரூ.600 கூடுதல் கேஷ்பேக் ஏர்டெல் சேவையில் ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும்
ஏர்டெல் மற்றும் அமேசான் வழங்கும் ரூ.2600 கேஷ்பேக் பெறுவது எப்படி?
– அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும். இவற்றில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவோ, மோட்டோ மற்றும் பல்வேறு இதர மாடல்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.
– ஸ்மார்ட்போனினை வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் ரூ.500 திரும்ப பெற முடியும்.
– இனி அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.
– அடுத்து அமேசான் சார்பில் வழங்கப்படும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக் தொகையை பெற ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். இதற்கு https://www.amazon.in/hfc/mobileRecharge – முகவரியை பயன்படுத்த வேண்டும். இனி ரூ.25 மதிப்புள்ள கேஷ்பேக் தொகை 24 மாதங்களில் வழங்கப்படும். கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.
ஏர்டெல் வழங்கும் ரூ.169 ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக சில 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் இதுபோன்ற சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)