இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600 அதிரடி உத்தரவு..!

Default Image

 புதிய தொழிலாளர் கொள்கை- இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600

சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒருநாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.Image result for உழைப்பாளர்கள் சிலை

இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் வங்கிகளை விரிவடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Related image

இடம் பெயர்ந்து கேரளாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்