பேஸ்புக் நிறுவனம் அதிரடி முடிவு..!
583 மில்லியன் போலி கணக்குகளை முடக்கியதன் மூலம் மோசடி, வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் ஆபாசம் போன்றவற்றை வெகுவாக குறைத்துள்ளதாக தனது சமூக தர விதிமுறைகளின் காலாண்டு அறிக்கையில் அறிவித்துள்ளது பேஸ்புக்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் 1.9 மில்லியன் பதிவுகள், வெறுப்புணர்வை தூண்டும் 2.5 மில்லியன் பதிவுகள், 21 மில்லியன் ஆபாச பதிவுகள் உள்பட மொத்தம் 837 மில்லியன் மோசடி பதிவுகளும் இதில் அடக்கம். இது போன்ற தீவிரவாதம், வன்முறை மற்றும் ஆபாசம் போன்றவற்றை சார்ந்த பதிவுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் கண்டறிந்து நீக்கப்படும் எனவும் பேஸ்புக் கூறுகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் வெளிப்படையாக பயன்படுத்திய 200க்கும் மேற்பட்ட செயலிகளை முடக்கிய பின்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பேஸ்புக்.
இது போன்ற பதிவுகள் உடனே பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும், 85.6% இது பயனர்களின் கையில் தான் உள்ளது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. 10,000 பதிவுகளில் 22 முதல் 27 பதிவுகள் வன்முறை தூண்டுபவையாக உள்ளன. பயனர்களை பாதிக்காதவண்ணம் இது போன்ற பதிவுகள் மேம்படுத்தப்பட்ட புகைப்படம் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் 1.9மில்லியன் பதிவுகள் பேஸ்புக்கால் நீக்கப்பட்டுள்ளன.
தவறான தகவல்கள், போலி கணக்குகள் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றை நடவடிக்கை எடுக்கும் பேஸ்புக்கின் இந்த வெளிப்படைத்தன்மை வெகுவாக அங்கீகரிக்கப்படுகிறது. பேஸ்புக்கின் முகம் கண்டறியும் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்ட போது , இந்த தளத்தில் பரப்பப்பட்ட வெறும் 38% வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களே கண்டறியப்பட்டன.
இதனால் பேஸ்புக் நிறுவனம் இது போன்ற வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை கண்டறிய இன்னமும் பயனர்கள் மற்றும் தணிக்கையாளர்களை நம்பியுள்ளது உறுதியாகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற பதிவுகளை கண்டறிய இன்னும் சில காலம் ஆகும்.
Q4 2017 முதல் Q1 2018 அறிக்கைகளை ஒப்பிடும் போது, மோசடிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கையை பேஸ்புக் எடுத்துள்ளதாக இந்த காலாண்டு அறிக்கை காட்டுகிறது.