#BREAKING: சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!
யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆக.16 முதல் 22-ஆம் தேதி வரை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஹம்பன் தோட்டா துறைமுகத்துக்கு சீன உளவுக்கப்பல் 11-ஆம் தேதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன உளவுக்கப்பல் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.