சல்மான் ருஷ்டிக்கு 10 முதல் 15 முறை கத்திக்குத்து.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Default Image

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75) 1988 ஆம் ஆண்டு வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் அவரது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது. இதனால் இவர் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் பல மிரட்டல்கள் இருந்து வந்தனர். சல்மான் ருஷ்டியின் புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் தடை விதித்தன. இந்த புத்தகத்தை தடை விதித்த முதல் நாடு இந்தியாவாகும். இந்த புத்தகத்திற்கு இந்தியாவில் இப்போதும் தடை நீடிக்கிறது.

பல முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களுக்கு இவரது கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக ‘தி சனடிக் வர்சஸ்’ புத்தகத்தை வெளியிட்டதாக 1989-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரான் அதிபர் அதுல்லா ருஹொலா கெமியோனி வெகுமதி அறிவித்தார். சல்மானை கொலை செய்பவருக்கு 3 மில்லியன் டாலர்கள் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார். இதுபோன்று அவரது உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல், மிரட்டல்களால் சல்மான் ருஷ்டி அச்சததுடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. அவரை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்பின் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது அவரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில், மேடையில் திடீரென ஏறிய அடையாளம் தெரியாத நபர் சல்மான் ருஷ்டியை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதில் சல்மான் ருஷ்டிக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர்களில் மருத்துவர் இருந்ததால் அவர் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனையடுத்து, சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான ஹாதி மதார் என அடையாளம் காணப்பட்டது. அவர் நியூ ஜெர்சியை சேர்ந்த ஃபேர்வியூ பகுதியை சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 வினாடிகளில் ருஷ்டியை 10 முதல் 15 முறை கத்தியால் குத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற சல்மான் பல ஆண்டுகளாக அந்நாட்டிலும், அமெரிக்காவிலும் வசித்து வருகிறார். சல்மான் ருஷ்டி 1981-ம் ஆண்டு எழுதிய மிட்னைட்ஸ் சில்ரன் என்ற புத்தகத்திற்காக உலகின் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர்ஸ் பிரைஸ் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்