மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இலவசம் வேண்டாம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். இது நமக்கு தேவையில்லை; மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் இலவச திட்டங்கள் அல்ல, அவை சமூகநலத்திட்டங்கள் ஆகும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.