இவர்களுக்கு கட்டணமில்லை! கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது – முதலமைச்சர்

2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு அமைச்சர் அறிவித்தார்.

கோரிக்கை வைக்காமலேயே அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளை தொடங்கிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி. மாணவர்கள் அனைவரும் கட்டணமின்றி முதலாம் ஆண்டு பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 4 பாடப்பிரிவுகள் மட்டுமின்றி பி.ஏ.சைவ சிந்தாந்தம் என்ற பாடப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்தில் ஒருவருக்கே இடம் தர முடியும் என்ற அளவுக்கு குறுகிய காலத்தில் கல்லுரி செல்வாக்கு அடைந்துள்ளது.

இந்தாண்டு புதிதாக சேர்ந்துள்ள, மாணவ, மாணவிகள் மட்டுமின்றி 2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என அறிவித்தார். இந்த திட்டங்களின் நோக்கம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கே.  இதன்பின் பேசிய முதல்வர், இலவசம் வேண்டாம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். இலவசத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பெரும் விவாதத்திற்குள்ளானது.

இது நமக்கு தேவையில்லை. கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசத்தில் சேராது. கல்வி, மருத்துவத்திற்காக செய்யும் செலவு இலவசம் ஆகாது. மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பட்டம் வாங்கிய பெண்கள் தகுதியான பணிகளை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment