மும்பையை விட்டு வெளியேறும் அர்ஜுன் டெண்டுல்கர்.! தடையில்லா சான்றுக்கு விண்ணப்பம்…
தேசிய அளவிலான அணிகளில், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் திட்டமிட்டு, மும்பை அணியிடம் இருந்து தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரர் ஆவர். இவர் உள்நாட்டு அளவிலான அணியில் மும்பை அணியிலும், ஐபிஎல் அணியில், மும்பை இந்தியன் அணியிலும் இடம் பெற்று வருகிறார்.
அவருக்கு தேசிய அளவிலான மும்பை அணியில் சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 2020-2021 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 2 ஆட்டங்கள் விளையாடிய பிறகு, மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
ஆதலால், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் திட்டமிட்டுள்ளாராம். ஆதலால், மும்பை அணியிடம் இருந்து விலக அந்த அணியிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளாராம்.