ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா… நவம்பர் 20ஆம் தேதி முதல் கோலாகல தொடக்கம்…
கத்தார் நாட்டில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நவம்பர் 20ஆம் தேதி, தொடங்கி, டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைய உள்ளது.
கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக பிரபலமான விளையாட்டு தொடர் என்றால் அது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான்.
இந்த உலக புகழ்பெற்ற கால்பந்து திருவிழாவை சிறப்பாக நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ள நாடு கத்தார். கத்தார் அரசு பிரமாண்டமாக இந்த தொடரை நடத்த உள்ளது.
வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி நவம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதி இறுதி போட்டியுடன் நிறைவடைகிறது.